நில அபகரிப்புப் புகார் தொடர்பாக துக்கையாண்டி மனைவி கைது

    நில அபகரிப்புப் புகார் தொடர்பாக முன்னாள் காவல்துறை அதிகாரி துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சோழிங்கநல்லூர் அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலங்களை அபகரித்ததாக துக்கையாண்டி குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது.
இதனை விசாரித்துவந்த மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர், துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமியை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் பெங்களூருவில் தங்கியிருந்த சுப்புலட்சுமியை காவல்துறையினர் கைதுசெய்து சென்னை அழைத்து வந்துள்ளனர்.  இந்த வழக்கில் சிக்கிய ஒய்வுபெற்ற காவல்துறை அதிகாரி துக்கையாண்டி சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமின் பெற்றுள்ளார்.