குற்றவாளிகளை பிடித்த காவலர்களுக்கு பதவிஉயர்வு தலா 5 லட்சம் ரூபாய்


Pasumai Nayagan www.thagavalthalam.com

        ந்து முன்னணி பிரமுகர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
     இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு தங்களது உயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றிய காவலர் முதல் கூடுதல் கண்காணிப்பாளர் வரையிலான 20 பேருக்கும் ஒரு படி பதவி உயர்வு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். தலைமறைவான குற்றவாளிகளை பிடிப்பதற்கு தீட்டப்பட்ட செயல்முறை திட்டத்தில் ஈடுபட்டவர்களை கௌரவிக்கும் வகையில், அனைவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
         குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு காயம் அடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், சிறப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர் லட்சுமணனின் துணிச்சலைப் பாராட்டிய முதல்வர், அவருக்கு ரொக்கப் பணமாக 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அவரின் மருத்துவச் செலவு அனைத்தையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இந்து முன்னணி பிரமுகர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.