பாராட்டுக்கள் திரு வெங்கடேஷ்..!

 குடியும் குற்றமும் அழிந்த கிராமம் - சப் இன்ஸ்பெக்டரின் சாதனை!

தருமபுரி மாவட்டம் நல்லாம்பள்ளி ஊராட்சி மலை கிராமம் அஜ்ஜிபட்டியில் வெங்கடேஷ் என்ற சப் இன்ஸ்பெக்டரின் முயற்ச்சியால் குடிப்பழக்கம் முதல் குற்றசெயல்கள் வரை அனைத்து சீர்கேடுகளும் பெருமளவு குறைந்துள்ளது. யோகா பயிற்சியினால் இது சாத்தியபட்டிருக்கிறது என்கிறார் திரு வெங்கடேஷ். தினமும் யோகா செய்வதால் உடல் மன மற்றும் மனித மாண்புகள் மேம்பட்டு விட்டுகொடுக்கும் மனப்பக்குவமும், நிதானமும் வளர்ந்துள்ளதால் சண்டை சச்சரவுகளும், குடிப்பழக்கமும் குறைந்துள்ளது. இந்த கிராமத்து குழந்தைகளிடமும் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தினமும் விடியற்காலையிலும் மாலையிலும் இவர்கள் அரசு பள்ளி வளாகத்தில் யோகா செய்கிறார்கள்.

 பாராட்டுக்கள் திரு வெங்கடேஷ்..!

                                                                                        
                                      -இணையதள செய்தியாளர் : சசிகுமார்